July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

1 min read
Bomb threat to actor Rajinikanth home

18-6-2020

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் விடுத்த மர்ம மனிதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது. அங்குதான் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இன்று காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசியவன் போபஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் இணைப்பை துண்டித்துவிட்டான்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு போலீசார் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் சென்றனர். அங்கு தீவிர சோதனை நடத்தினர். ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 1 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே போனில் பேசியவன் மிரட்டல் எப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் எங்கிருந்து எந்த எ ண்ணில் இருந்து பேசினான் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *