June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

நயன்தாரா-விக்னேஷ்சிவனுக்கு கொரோனா என வதந்தி

1 min read
Rumor has it that Nayanthara and Vignesh Shivan are Corona

21-6-2020

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.

எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான வசந்தம் கார்த்திகேயனுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதனால் அவர், கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருகிறார்.

நயன்தாரா

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது பிரபல நடிகை நயன்தாரா அவருடன் வாழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.

ஆனால் இந்த செய்திகள் உண்மையில்லை என்றும் வதந்தி என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நயன்தாராவும் நானும் நலமாக இருக்கிறோம் என்றும் நாங்ள் இருவரும் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றும் விக்னேஷ்சிவன் கூறியுள்ளார்.
நயன்தாரா, உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்து வருவதாகவும் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.