May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் பி.டி.ஐ. செய்தி நிறுவனம்; பிரசார் பாரதி எச்சரிக்கை

1 min read
BTI News reports in support of China.; Prasar Bharati Warning

28-6-2020

சீனாவுக்கு ஆதரவாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிடுவதாகவும் அதானால் அதனுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று பிரசார் பாரதி எச்சரிக்கை
விடுத்துள்ளது.

பி.டி.ஐ. செய்தி நிறுவனம்

பி.டி.ஐ. செய்தி நிறுவம் பல்வேறு பத்திரிகைகள், டெலிவிஷன்களுக்கு செய்தியை கொடுக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த 1947 – ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது. 1949 – ம் ஆண்டு செயல்பாட்டை தொடங்கியது.

2019 -ம் ஆண்டு நிலவரப்படி 99 மீடியா நிறுவனங்கள் அதன் 5,416 பங்குகளையும் வைத்திருக்கின்றன.

பஞ்சாப் கேசரி பத்திரிகையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எடிட்டரான விஜய் குமார் சோப்ரா தற்போது பி.டி. ஐ. தலைவராக உள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான பி.டி.ஐ பத்திரிகை சந்தாக்கள் மூலம் வருவாய் ஈட்டுகிறது.

டெல்லியில் இந்த நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது.

சீனாவுக்கு உத்தரவு

சமீபத்தில் பி.டி.ஐ இணையதளத்தில் சீனாவுக்கான இந்திய தூதர் சன் வெய்டோங் பேட்டி வெளியிடப்பட்டது. லடாக் விவகாரத்தில் இந்தியாவை குற்றம் சாட்டி அவர் பேட்டியளித்திருந்தார்.

இந்தியாவே எல்.ஓ.சி விவகாரத்துக்கும் பிரச்சினைக்கும் காரணம் என்றும் சன் வெய்டோங் குற்றம் சாட்டியிருந்தார்.

பிரசார் பாரதி

இந்த பேட்டியை வெளியிட்டதால் பி.டி.ஐ செய்தி நிறுவனம் பிரசர் பாரதியின் கோபத்துக்குள்ளாகியுள்ளது.

பி.டி.ஐ வெளியிடும் செய்திகள் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிடும் வகையில் இருப்பதாக பிரசார்பாரதி குற்றம் சாட்டியுள்ளது.

ஒப்பந்தம் ரத்து?

பிரசார்பாரதியின் தலைவர் சமீர் குமார் பி.டி.ஐ நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ” நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பி.டி.ஐ நிறுவனம் செய்திகள் வெளியிடவில்லை.

பி.டி.ஐ . வெளியிடும் செய்திகள் மற்றும் தலையங்க குறைபாடுகள் குறித்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகள் பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.

பி.டி.ஐ நிறுவனத்தின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக அந்த நிறுவனத்துடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டியதுள்ளது.

விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் ” என்று சொல்லப்பட்டுள்ளது.
அதாவது ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று பிரசார் பாரதி மிரட்டி இருக்கிறது.

இதுகுறித்து பி.டி.ஐ நிறுவனம் தரப்பில் கூறுகையில், ” பிரசார்பாரதியிடத்தில் இருந்து எங்களுக்கு கடிதம் வந்தது உண்மைதான்.

அதற்கு தகுத்த ஆதாரங்களுடன் நாங்கள் பதிலளிப்போம்” என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் இருக்கும் பிரசார்பாரதி தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும்.

ஆண்டுக்கு ரூ. 9.15 கோடிக்கு பி.டி.ஐ நிறுவனத்துக்கு சேவைக் கட்டணமாக பிரசார்பாரதி செலுத்தி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.