May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

மசூத் கொல்லப்பட்டதால் பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக மாறியது தோடா மாவட்டம்

1 min read


Doda district became a terrorist-free area because of Masood’s killing

29-6-2020

பங்கரவாதி மசூத் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டம்
பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

துப்பாக்கி சண்டை

காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தெற்கு காஷ்மீரின் குல்கோகர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதி போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுகொல்லப்பட்டனர்.

அதனன் பின் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஏ.கே 47 உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
கடந்த 26-ந் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் சேவா உலர் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தோடா மாவட்டம்

பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளில் ஒருவன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் . இவன் தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவன்.
இவனை கொல்லப்பட்டதை அடுத்து தோடா மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

இது குறித்து போலீஸ் டிஜிபி கூறியதாவது:-
ஆனந்த்நாக் மாவட்டத்தில், குல்சோஹர் பகுதியில், போலீசாருடன் நடந்த மோதலில், பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால், தோடா மாவட்டம் பயங்கரவாதி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தோடா மாவட்டத்தை சேர்ந்த மசூத் மீது பலாத்கார வழக்கு உள்ளது. இதனால், தலைமறைவான அவன், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்து, காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.