July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மாங்கொட்டையில் இவ்வளவு நன்மைகளா?

1 min read
Benefits of Mango seeds

20-7-2020

முக்கனிகளுள் முதன்மையானது மாம்பழம். இது பல்வேறு சத்துக்களை கொண்டது என்பதை நாம் அறிவோம். மாம்பழத்தை மிக அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சினை வரும் என்றும் குழந்தைகளுக்கு மாந்தம் ஏற்படும் என்றும் சொல்வார்கள். தற்போது கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழம் உடல்நலத்திற்கு கேடு என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியானாலும் மாம்பழத்தின் சுவை அலாதியானது.  ஆனால் மாம்பழத்தைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

நாம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டையில் அவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன. 1௦௦ கிராம் மாங்கொட்டையில் நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் 21 கிராம், ஆஷ் 2 கிராம், மக்னீசியம் 34 கிராம், பாஸ்பரஸ் 20 கிராம், பொட்டாசியம் 158 கிராம், சோடியம் 7 கிராம், வைட்டமின் B1 . 8 கிராம், வைட்டமின் B2 .3 கிராம், வைட்டமின் B6 19 கிராம், வைட்டமின் B12 12 கிராம், வைட்டமின் C 56 கிராம், வைட்டமின் A 27 கிராம், வைட்டமின் E 3 கிராம், வைட்டமின் K 59 கிராம் இருக்கின்றன.

இத்தனை சத்துமிக்க, மாங்கொட்டையை முறையாக உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலின் பல்வேறு உபாதைகளை சரிசெய்துவிடலாம்.

ரத்த சோகை

ரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற ரத்த சிவப்பணு குறையும்போது, ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. ஹீமோகுளோபின், ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் சேர்க்கும். ரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது. கண் கீழிமைகளை கீழ்நோக்கி இழுப்பதன் மூலம், அவற்றின் பின்புறம், ரத்த ஓட்டம் இன்றி, தோல் வெளுத்து காணப்படுவதை வைத்து, ரத்த சோகையின் அளவை அறியலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கு, அடிக்கடி சோர்வும் தலைவலியும் ஏற்படும்.

ரத்த சோகைக்கு மாங்கொட்டை நல்ல மருந்தாக பயன்படுகிறது. மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து, பொடியாக வைத்துக்கொள்ளவேண்டும்.  பின்னர் அந்தப் பொடியை, தினமும் தேனில் குழைத்து, சாப்பிட்டு வரவேண்டும். இதில் ரத்த சோகை குணம் அடையும்

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு தொடர்ந்து போகும்போது, உடலில் உள்ள நீர் மொத்தமாக வெளியேறி, உடல் வறண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும். மாங்கொட்டை அந்த பாதிப்பைப் போக்கும். மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து பொடியாக்கி, அத்துடன் ஓமப்பொடி, சுக்குப்பொடி, கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டு, அதில் பாதி தேக்கரண்டி அளவு எடுத்து, நெய் சேர்த்து குழைத்து, வாயிலிட்டு விழுங்க, வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

கரு வளர்ச்சிக்கு…

 கர்ப்பிணிப் பெண்கள் மாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, அவர்கள் வயிற்றில் வளரும் கருவின் வளர்ச்சி சீராக இருக்கும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.

உடல் எடைக்குறைக்க…

உடல் பருமன் மற்றும் உடல் எடையை குறைக்க, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம். மாம்பருப்பை அரைத்து வத்தக்கொழம்பாக செய்து, சாப்பிடலாம். மாங்கொட்டை கொழம்பு, கிராமங்களில் இன்றும் ஃபேமஸ், மாம்பருப்பில் சுவையான துவையலும் செய்து சாப்பிடுவார்கள். இதன்மூலம், சமச்சீரான உணவு கிடைத்து, உடல் எடையைக்குறைக்கமுடியும்.

கொழுப்பு

 உடலில் அதிகமாக சேர்ந்த கொழுப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு தொல்லைகளைத்தருகிறது. வயதாகும்போது, உடலிலுள்ள கொழுப்புகளைக்குறைத்து, எடையை சீராக வைத்துக்கொள்வது, அவசியமாகும். உணவில் மாம்பருப்பு பொடியை சேர்த்துவரலாம், அல்லது பொடியை தேனில் கலந்து சாப்பிட்டுவரலாம். இதன்மூலம், கொழுப்பைக் கரைக்கமுடியும். உயர் ரத்த அழுத்தம் ரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக ரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும்.

 மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் ரத்தஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும்.

நீரிழிவு நோய் (சர்க்கரை) பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம், உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை, நெருங்கவிடாது.

புரதச்சத்து உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். உடலில் அழியும் திசுக்களுக்கு மாற்றாக தினமும் உருவாகும் திசுக்களின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும், புரதம் இன்றியமையாத ஒன்றாகும். இரத்த ஹீமோகுளோபின் வலுப்பட தேவைப்படும் புரதம், நகம், முடி வளரவும் பயன்படுகிறது. பொதுவாக இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிகமாகக் காணப்பட்டாலும், பால் மற்றும் பீன்ஸ் வகை காய்கறிகளிலும் புரதச்சத்து நிறைய இருக்கிறது. அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில், புரதச்சத்து, அதிகமாக உள்ளது. மாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.