தண்ணீரை சுத்தமாக்கும் வாழைப்பழ தோல்
1 min readBanana peel to purify water
31.7.2022
தண்ணீரை வாழைப்பழத் தோல் சுத்தம் செய்கிறது.
வாழைப்பழத் தோல்
தண்ணீரை சுத்தம் செய்து குடிக்க பியூரிபையர் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறோம். இனிவாழைப்பழத் தோல் இருந்தால் போதும். சுத்தமான குடிநீர் கிடைத்துவிடும்.
குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் வருமாறு:-
சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாத அளவிற்கு மாசடைந்து காணப்படுகிறது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு. Also Read – மவ்ஜி டைம் கபே ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத்தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
நச்சுகள்
நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.
நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஏழ்மை நாடுகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அந்த ஆய்வு முடிகிறது.