May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

கணித மேதை சகுந்தலா தேவிக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு கின்னஸ் சாதனை விருது ; மகள் பெற்றுக் கொண்டார்

1 min read


Guinness World Record holder for mathematical genius Shakuntala Devi after 40 years; The daughter received

30-7-2020

கணித மேதை சகுந்தலா தேவிக்கு 40 ஆண்டுகளுக்கு பின்னர் கின்னஸ் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது .விருதை அரவது மகள் பெற்றுக்கொண்டார்.

கணித மேதை

கணித மேதை சகுந்தலா தேவை பெங்களூரில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு சர்க்கஸ் கலைஞர். சகுந்தலா தேவிக்கு மூன்று வயதாக இருந்த போது, அவரது தந்தையுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கணிப்பு தந்தையை ஆச்சரியப்பட வைத்தது. அதன் மூலம் சகுந்தலாதேவி கணிதத் திறன் வெளிப்பட்டது.
மகளின் கணிதத் திறமையை வளர்க்க தந்தை தன் சர்க்கஸ் வேலையை விட்டுவிட்டு சகுந்தலாவின் கணித திறனை தெருக்களில் நிகழ்த்தி காட்டினார்.
அவருக்கு ஆறு வயது இருந்த போது மைசூர் பல்கலைக்கழகத்தில் அவரது கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை வெளிப்படுத்தினார். எட்டு வயதில் அவர் அதையே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்து வெற்றி பெற்றார்.

1944 ல் தன் தந்தையுடன் லண்டன் சென்ற சகுந்தலா 1960 ன் மத்தியில் இந்தியா திரும்பினார். கொல்கத்தாவை சேர்ந்த பரிடோஸ் பேனர்ஜி என்னும் IAS அதிகாரியை மணந்தார். இவர்களுக்கு 1979 ல் விவாகரத்து ஆனது.1980 ல் சகுந்தலா பெங்களூருக்குத் திரும்பினார் .

1988ல் ஆர்தர் ஜென்சென் என்ற கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் பேராசிரியர் ஒருவர் சகுந்தலா தேவியின் கணித திறனை பரிசோதித்தார் . பேராசிரியர் கேள்வியை கேட்டுவிட்டு அவரது நோட்டு புத்தகத்தில் கேள்வியை குறிப்பதற்குள் சகுந்தலா தேவி பதிலை துல்லியமாக சொல்லி விடுவார்.

தேவி ஜோதிடத்திலும் தேர்ந்தவர்.
2013 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சகுந்தலா தேவி சுவாச பிரச்சனைகளால் பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 2 வாரங்களில் அவர் இதயம் மற்றும் சிறுநீரகம் சிக்கல்களால் அவதிப்பட்டார். 2013 -ம் ஆண்டு
ஏப்ரல் 21,இல் மருத்துவமனையில் தனது 83 வது வயதில் இறந்தார். அவருக்கு அனுபமா பானர்ஜி என்ற மகள் உள்ளார்.

கின்னஸ்

சகுந்தலா தேவியின் கணித திறமைக்காக, “கின்னஸ்’ சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

இதனிடையே 40 ஆண்டுகளுக்கு பின்னர் அதி வேக மனித கணக்கீடு என்று கின்னஸ் உலக சாதனையாளர் விருது சகுந்தலா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. லண்டனில்நடைபெற்ற வருது வழங்கும் விழாவில் சகுந்தலாதேவியின் மகள் அனுபமா பானர்ஜி விருதை பெற்றுக்கொண்டார். அவருக்கு திரைப்பட நடிகை வித்யாபாலன் பாராட்டு கடிதம் எழுதியதுடன் சிறப்பு பரிசையும் அனுப்பி உள்ளார்.

பரிசு பெற்றது குறித்து பேட்டியளித்த அனுபமா பானர்ஜி கூறியதாவது:-
எனது தாய் உலக சாதனை படைக்கும் போது எனக்கு 10 வயது. நான் எங்கு சென்றாலும் அனைத்து மக்களும் இதனை பற்றி பேசுவார்கள் அந்த பதிவு உலக அளவில் ஒரு பெரிய சாதனை என்று எனக்கு தெரியும். லண்டனின் கோவென்ட்ரியில் உள்ள ட்ரோகாடெரோ மையத்திற்கு சென்றது எனக்கு நினைவிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.