September 23, 2026

Seithi Saral

Tamil News Channel

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பிரசாதம்- முதல்வரிடம் அமைச்சர் ரமேஷ் வழங்கினார்

1 min read

Minister Ramesh presented the Meenakshi Amman Temple consecration *prasadam* to the Chief Minister.

21.9.2026
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ம்தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு நேரில் வழங்கப்பட்டது. அப்போது, முதலமைச்சர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

17 வருடத்திற்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் த.வெ.க. அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தவெக அரசு பக்தர்கள் எந்தவித சிரமமின்றி சிறப்பான வகையில் தரிசனம் செய்ய சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தது. பக்தர்கள் ஏற்பாடுகளை வெகுவாக பாராட்டினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *