தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா ; 118 பேர் சாவு
1 min read
IN Tamil Nadu 5.883 person affected for corona and death 118 one day
8-8-2020
தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 118 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
5,883 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று பற்றி தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) மட்டும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5,866 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 17 பேர். இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,410 பேர் ஆண்கள், 2,473 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,75,744 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,15,136 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
தென்காசியில் 203 பேர்
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து, இன்று, தேனியில் 452 பேருக்கும், செங்கல்பட்டில் 425 பேருக்கும், திருவள்ளூரில் 391 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 284 பேருக்கும், தூத்துக்குடியில் 247 பேருக்கும், விருதுநகரில் 246 பேருக்கும், தஞ்சாவூரில் 227 பேருக்கும், தென்காசியில் 203 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,043 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,32,618 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 869 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 94,100 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று ராணிப்பேட்டையில் 366 பேரும், திருவள்ளூரில் 327 பேரும், விழுப்புரத்தில் 277 பேரும், மதுரையில் 256 பேரும், தேனியில் 252 பேரும், தூத்துக்குடியில் 229 பேரும், சேலத்தில் 226 பேரும், கள்ளக்குறிச்சியில் 210 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
18 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு118 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 81 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 37பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 4,808 ஆக உயர்ந்துள்ளது.
இன்று இறந்தவர்களில் சென்னையில் 20 பேரும், கோவையில் 10 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், திருநெல்வேலியில் 7 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், சிவகங்கை, தேனியில் தலா 5 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, திருப்பத்தூர், விருதுநகரில் தலா 4 பேரும், கடலூர், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், விழுப்புரத்தில் தலா 3 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, வேலூரில் தலா 2 பேரும், அரியலூர், தருமபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தென்காசி, திருப்பூரில் தலா ஒருவரும் அடங்குவர்.
இன்று 67,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 65,872 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 31,55,619 மாதிரிகளும், 30,41,529 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.