June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய், சூர்யாவுக்கு எதிராக மீரா மிதுனை தூண்டி விடும் தயாரிப்பாளர்

1 min read

8.8.2020

Producer who will provoke Meera Mithun against Vijay and Surya

தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொண்டு வலம் வரும் மீரா மிதுன் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர் நடிகைகளையும் வம்புக்கு இழுத்து தரக்குறைவாக பேசி வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கொச்சையான வார்த்தைகளில் பேசியுள்ளார். அவர்களை மட்டுமல்லாமல் அவர்களது மனைவியும் பேசியுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீரா மீதுனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தப்பித்தவறி மீராமிதுன் நேரில் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை.

ஆனால் இவ்வளவு தைரியமாக பேசும் மீரா மிதுனுக்கு யாரோ ஒருவர் பின்னாடி இருந்து சாவி கொடுப்பது தெளிவாகவே தெரிந்து வருகிறது. அதுவும் விஜய்க்கு பிடிக்காத தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் விளையாட்டு சம்பந்தமான மெகா பிளாக்பஸ்டர் படத்தை தயாரித்தவர் தான் அந்த தயாரிப்பாளர். அது மட்டுமில்லாமல் பல விஜய் படங்களை தயாரித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு விஜய்க்கு அவரது நடவடிக்கையில் பிடிக்காததால் அவரது படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

அப்போதே அந்த தயாரிப்பாளருக்கு விஜய்யின் மீது ஒரு வஞ்சம் இருந்ததாம். அதேபோல் அப்போது தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சூர்யா படத்தை தயாரிக்கவும் ஆசைப்பட்டாராம். ஆனால் சூர்யா பெரும்பாலும் தன்னுடைய உறவினர்கள் படங்களில் மட்டுமே நடித்து வந்ததால் தனக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என ஒரு பக்கம் கோபமாம்.

மீரா மிதுனை தற்போது தன் பக்கம் வைத்துக் கொண்டு முன்னணி நடிகர்களை தாக்கிப் பேசவைத்து வருகிறாராம். ஆனால் மீராமிதுன் தல அஜித்தை பற்றி மட்டும் எதுவும் கூறுவதில்லை என்பது அனைவருக்கும் சந்தேகத்தை கிளப்பியது.

கொஞ்சம் வரலாற்றை அலசிப் பார்த்தால் அந்த தயாரிப்பாளருடன் தொடர்ந்து தல அஜித் கடந்த சில வருடங்களாக படம் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்தான் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை என்றாலும் அரைகுறையாக உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது.

சூர்யா மற்றும் விஜய் இருவருமே தற்போது தன்னுடைய மார்க்கெட் நிலவரங்களில் உச்சத்தில் இருப்பதால் அந்த தயாரிப்பாளருக்கு அவர்களின் கால்ஷீட் கிடைக்காத விரக்தி என்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *