சொந்த நாட்டுக்காக ஆபாச நடிகையின் தாராளம்
1 min read
For the native country of the generous porn actress miya
12-8-2020
சொந்த நாட்டுக்காக ஆபாச நடிகை மியா கலிஃபா தனது தாராள மனதை காட்டியுள்ளார்.
மியா கலிஃபா
ஆபாச நடிகை மியா கலிஃபா என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் ஆபாச படங்களில் நடித்து கோடிக்கணக்கா ரூபாய் சம்பாதித்தார்.
மியா கலிஃபா வாழ்க்கையில் பல்வேறு துயரங்கள் ஏற்பட்டன. மேலும் மியா கலிஃபாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால், அந்த துறையை விட்டு தற்போது ஸ்போர்ட்ஸ் கமெண்டேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
அவருடைய அடையாளமே அவர் அணிந்திருக்கும் கண்ணாடிதான். மியா கலிஃபா பிறந்தது லெபனான். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது.
பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் சுமார் 200 பேர் வரை இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணாடி
லெபனானை பூர்வீகமாக கொண்ட மியா காலிஃபா, வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார்.
தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய நாட்டிற்காக தனது அடையாளங்களில் ஒன்றை இழக்க முன்வந்ததை அவரது ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.