கண்ணதாசன் ஒரு கவிச்சக்கரவர்த்தி / முத்துமணி
1 min read
Kannadhasan oru Kavi chakkavarthi By Muthumani
அவள் அரண்மனை, அந்தப்புரம், தோழியர் சூழ் இளவரசி. நாடாளும் மன்னன் மகள். அவன் நாட்டிலுள்ள சாமானியமான குடிமகன். இருவருக்குமிடையே மலர்ந்தது உண்மைக் காதல்.
அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. என்ன இருந்தாலும் உனக்கு நான் இணையாக முடியுமா? என்று பொருள்படும்படி கேட்கிறான். வானத்தில் பறந்தாலும் காக்கை, குயிலாக மாறி விடுமா? என்றெல்லாம் கேட்கிறான்.
இளவரசி, உண்மையான காதல்தான் உலகில் உயர்ந்தது. அது அனைவருக்கும் பொதுவானது. அந்தக் காதலின் முன்பு வேறு எந்த விலை உயர்ந்த பொருளும் விலைமதிப்பற்றது ஆகிவிடும்.
காதலின் முன்னே அவையெல்லாம் கானல் நீர் போல் மறைந்துவிடும் என்ற உவமையைக் கையில் எடுத்து, கண்ணதாசன் பேசுகிறபோது, ஏறத்தாழ பத்துப் பொருட்களை வரிசையாகக் கூறுகிறார்.
‘மன்னவர் நாடும் மணிமுடியும்
மாலிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்பே
கானல் நீர் போல் மறையாதோ…’
பாடலை ரசித்துப் பாருங்கள்… கண்ணதாசன் ஒரு கவிச் சக்கரவர்த்தி.