நயன்தாராவின் “காதம்பரி” தலைப்பு பறிபோனது; விக்னேஷ் சிவன் கவலை
1 min read
Nayantara’s “Kadambari” title was snatched away; Vignesh Sivan worries
19-8-2020
நயன்தாராவின் காதம்பரி என்ற தலைப்பு தன்னை விட்டு பறிபோனதால் விக்னேஷ் கவலை அடைந்துள்ளார்.
காதம்பரி
காதம்பரி என்ற பெயரில் ஒரு சினிமாப் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு இந்தப்படம் உருவாகி இருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குனர் அருள் கூறியதாவது:
டிரைலர்
இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து எடுத்தேன். அந்தப் படத்தில் நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது.
இந்த படம் குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.
இப்படத்தின் டிரெய்லரை புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு உள்ளனர். முதலில் இதன் டிரெய்லரை வெளியிடுமாறு இயக்குனர் விக்னேஷ் சிவனை அணுகியதாகவும் ஆனால் அவர் வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன்
நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு காதம்பரி என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் புதிய படம் இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும், தான் நினைத்த தலைப்பை வேறு ஒரு படத்திற்கு வைக்கப்பட்டதால் விக்னேஷ் சிவன் கவலை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட மறுத்ததாகவும் தெரிகிறது.