எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்
1 min read
SP Balasubramaniam Improvement in health
20-8-2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 75) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூறப்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
அவருக் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன. நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர்காக்கும் உபகரணங்கள் வழியாக, ‘ஆக்ஸிஜன்’ அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை வட்டாரத்தில் கூறியதாவது:-
வாய்ப்புகள் அதிகம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறது. ‘ஆன்டிபயாடிக்’ கொடுக்கப்பட்டது. மெதுவாக, அவரது உடல்நிலை தேறி வருகிறது.’எனினும், அவர் உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சுவாசிப்பதால், ‘கிரிட்டிகல்’ என்றே, மருத்துவ ரீதியில் குறிப்பிட வேண்டியுள்ளது.தற்போதுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்படும்போது, குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்கள்.