எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது மகனிடம் சைகையில் பேசினார்
1 min read
SP Balasubramaniam gestured to his son
25-8-2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தன் மகனிடம் சைகையில் பேசி நலம் விசாரித்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை பின்னர் மோசமானது. அவருக்கு உயர்காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும் நிலையில், நுரையீரல் பாதிப்பை சரி செய்யும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சைகையில்..
எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி. சரண் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
சைகையில்..
எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி. சரண் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “என் தந்தையின் உடல் நிலை சீராக உள்ளது. நினைவுடன் உள்ளார். என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
அவரிடம் உங்களுக்காக உங்கள் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக கூறினேன். என்னையும், என் தாயின் உடல் நலத்தையும், சைகை காட்டி கேட்டறிந்தார்.
என் தந்தை, விரைவில் பூரண குணமடைந்து, அனைவரையும் சந்திப்பார். மருத்துவக் குழுவினர், அவரை மீட்டெடுக்க அளித்து வரும் சிகிச்சைக்கு நன்றி.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசினார்.
இந்த தகவல் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அறிக்கை
இதற்கிடையே மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன், தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது.
மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.