May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

பாரதீய ஜனதா மாநில துணை தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை

1 min read

Former IPS officer Annamalali appiontedvice-president of Tamil nadu BJP

29-8-2020

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை பாரதீய ஜனதாவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை

கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. தமிழகத்தை சேர்ந்த இவர் தனது பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை தமிழக பாரதீய ஜனதா துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை அந்தக் கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
அவரது பணி சிறக்க வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

வாழ்க்கை குறிப்பு

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. இவருடைய தாய் பரமேஸ்வரி. மனைவி அகிலா சுவாமிநாதன்.
கோவையில் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை, இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப் பெற்றார்.

இவர் திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகியதையடுத்து, தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாக கூறி வந்தார். பின்னர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று என்று கூறி வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கிடைத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.