May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்திய மந்திரி அமித்ஷா கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்

1 min read

Union Minister Amit Shah has recovered from Corona

29-8-2020
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடல்நிலை முற்றிலும் குணமடைந்ததை தொடர்ந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 14-ந் தேதி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

ஆனால்17-ந் தேதி அவர் உடல் வலி மற்றும் லேசான மயக்கத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கான சிகிச்சை பிரிவில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையிலிருந்தே தன் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தனர்.
தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

குணம் அடைந்தார்

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா முற்றிலும் குணமடைந்துவிட்டார். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.” என்று கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.