May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை

1 min read

Tunnel on the India-Pakistan border

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை

29-8-2020

ஜம்முவில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் வேலிக்கு அடியில் 20 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சுரங்கப்பாதை

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் காஷ்மீர் மாநிலத்திற்குள் இருக்கும் பயங்கரவாதிகளை தேடி கண்டு பிடித்து அழிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை வேலியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம், ஜம்முவின் சம்பா செக்டார் பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் கண்டறிந்தனர்.

அதனை ஆய்வு செய்த போது, அதன் வாயில் உள்ளே பிளாஸ்டிக் மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் அடையாளங்களாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சுரங்கப்பாதையை முழுவதுமாக கண்டுபிடிப்பதற்காக ஜேசிபி எந்திரம் உடனடியாக கொண்டு வரப்பட்டு தோண்டப்பட்டது. பி.எஸ்.எப். ஐஜி ஜம்வால், அந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.

அந்த சுரங்கத்தில் இருந்த மணல் மூட்டைகளில் கராச்சி மற்றும் ஷகர்கார்க் என எழுதப்பட்டிருந்தது. அதில் உள்ள தேதிகள் மூலம் அந்த மூட்டைகள் சமீபத்தில் தான் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சுரங்கம் அருகே 700 மீட்டர் தூரத்தில் பாகிஸ்தான் எல்லையில் குல்ஜார் செக் போஸ்ட் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரவு

ஜம்மு-காபயங்கரவாதிகளின் ஊடுருவவும், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தவும், இது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில், இது போன்று வேறு ஏதும் கட்டமைப்புகள் உள்ளனவா என வீரர்கள் தேடி வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவலை எதிர்ப்பதில் விழிப்புடன் இருக்குமாறு, பி.எஸ்.எப். டிஜிபி இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.