தனுசு / ராகு-பெயர்ச்சி பலன்கள்/ காழியூர் நாராயணன்
1 min read
Ragu-kethu peyarchi palan / Sagittarius / Kaliyur Narayanan
1-9-2020
கூர்மையான மதிநுட்பம் நிறைந்த தனுசு ராசி அன்பர்களே! சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களிடமிருந்து ஒதுங்கி நிற்பீர்கள். நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பீர்கள். பெரியோர்களிட -மும், சான்றோர்களிடமும், செல்வாக்கு படைத்தவர் களிடமும் விசுவாசிகளாகவும், நண்பர்களாகவும் இருப்பீர்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி பல முன்னேற்றங்களை தரும். இது வரை ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான மிதுன ராசியில் இருந்து பல்வேறு இன்னல்களை தந்துகொண்டிருந்தார். குறிப்பாக இடம்விட்டு இடம் பெயரும் சூழ்சிலையை உருவாக்கி இருப்பார். தரம் தாழ்ந்தாரோடு சேர வைத்து உங்கள் செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது6-ம் இடமான ரிஷபத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம். இனி மேற்கண்ட இடர்பாடுகள் வராது. அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார்.மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான கும்பத்தில் விழுகிறது.இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.
கேது இதுவரை உங்கள் ராசியில் இருந்து உடல் உபாதைகளையும், அரசால் பிரச்சினையையும் தந்திருப்பார்.உங்கள் முயற்சியில் தடைகள் வந்திருக்கலாம்.இப்போதுகேது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விருச்சிகத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் முந்தைய பிற்போக்கான நிகழ்வுகள் வராது. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். அதற்காக கவலை கொள்ளவேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
கேதுவின் பார்வையால் பலன் கிடைக்குமா?
கேது சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வை ரிஷபத்தில் விழுகிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண்அடையும் நிலை ஏற்படும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
மற்றகிரகங்களின் நிலை
சனிபகவான் இப்போது உங்கள் ராசியில் இருக்கிறார். நெருப்பு தொடர்- பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும். ஆனால் அவரது 3-ம் இடத்துப்பார்வை -யால் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் 2020 டிசம்பர் 26-ந் தேதி உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடமான மகரராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவர் குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.ஆனால்அவரின்10-ம் இடத்துப்பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிகஉறுதுணையாக இருப்பர்.
குரு பகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.அவரால்கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் ஆனாலும் கவலைபட வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. அவர் 2020 நவம்பர் 15-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார்.இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்கும்.இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும்.பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். அவர் ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார் .பிறகு அவர் 2021 நவம்பர் 14-ந் தேதி முழுபெயர்ச்சி அடைந்து 3-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். அவரால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். தேவைகள்பூர்த்தி ஆகும்.பின்னடைவுகள் மறையும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். அதன்பிறகு2022 ஏப்ரல் 14-ந் தேதி பெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவர் மனஉளச்சலையும்,உறவினர் வகையில் பகையையும் உருவாக்குவார்\
இனி விரிவான பலனை காணலாம்.
2020 செப்டம்பர் முதல் 2020 டிசம்பர் வரை
ராகு,குருவால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது. நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு, வீண் மனக்கவலை மறையும். உங்கள் திறமை பளிச்சிடும். கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலையில் திருப்தி காண்பீர்கள். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிரிகளின் இடையூறுகளில் இருந்து விடுபடுவீர்கள்.தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டுவந்தர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். இதனால் வீண் விரையம் தடைபடும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர்.காலர்ஷிப்போன்றவை கிடைக்கும். விவசாயிகள் மஞ்சள், கொண்டைக்கடலை,உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர்.நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். நவம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குருதிருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குடும்ப- த்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறலாம். சகோதரிகளால் பணம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.உடல்நலம் கேதுவால்பித்தம், மயக்கம் போன்ற சிற்சில உபாதைள் வரலாம்.
2021ஜனவரி முதல் 2021நவம்பர் வரை
ராகு காரிய அனு கூலத்தைக் கொடுப்பார்.கேதுவால் பொருள் விரையம் ஏற்படலாம். குரு பல்வேறு முன்னேற்றங்களை தருவார்.பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் அனைத்தும் விலகும். வாகன சுகம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சீரான நிலை இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வீண் அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர் பயணம் மேற் கொண்டாலும் அது அனுகூலமான பலனைத்தரும்.ஏப்ரல் 4-ந் தேதி முதல்செப்டம்பர் 13-ந் தேதி வரை வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.வியாபாரம் செய்வோர் முன்னேற்றம் காண்பர். குருவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் நல்ல வருமானத்தை பெறுவர். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
கலைஞர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும்.மாணவர்கள்கல்வியில் சிறப்படைவர். கெட்டவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்கு செல்வர். விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள் முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு அதிகமாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை குடும்ப ஒற்றுமைக்காக சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவும். உடல்நலம் சீராக இருக்கும்.
2021 டிசம்பர் முதல்
இந்த காலத்தில் மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும்.எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
உத்தியோகம் கடந்த காலத்தைவிட வேலைப் பளு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படலாம். சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும். அல்லது அவர்கள் கையால் எதையும் ஆரம்பித்தாலும் அது நல்ல அனுகூலத்தை கொடுக்கும்.
கலைஞர்கள்:புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும்.விவசாயம் புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குருவின் பார்வையால் குதூகலம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். உடல்நலம் சிறப்படையும்.
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள்.ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள்.