15-ந் தேதிக்குப் பிறகு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு
1 min readFinal year semester examination after 15th Sep.
1-9-2020
வருகிற 15-ந் தேதிக்கு பிறகு இறுதி ‘செமஸ்டர்’ தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.
செமஸ்டர் தேர்வு
கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. அவை எப்போது திறக்கப்படும் என்று இன்னும் தெரியவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகுதான் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஊரங்கால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இறுதியாண்டு ‘செமஸ்டர்’ தேர்வு தவிர, மற்ற அனைத்து பருவ தேர்வுகள், அரியர் தேர்வுகள் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் இந்த தேர்வை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
15-ந் தேதிக்குப் பின்
இந்த நிலையில், இறுதி ஆண்டு ‘செமஸ்டர்’ தேர்வு வருகிற (செப்டம்பர்)15ம் தேதிக்கு பின் நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
இறுதியாண்டு மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேர்வு அட்டவணை, தேர்வு மையங்கள் பற்றி விரைவில் அறவிக்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள்.
பி.ஆர்க். பட்டப்படிப்பு
பி.ஆர்க். பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வருகிற 7 -ந் தேதி தொடங்குகிறது. பி.ஆர்க் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இணையதளத்தில் பதிவு செய்யலாம். www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.