இந்திய தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் பதவி ஏற்பு
1 min readRajiv Kumar takes over as Election Commissioner of India
1-9-2020
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
புதி தேர்தல் கமிஷனர்
இந்திய தேர்தல் கமிஷனராக இருந்த அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, முன்னாள் மத்திய நிதித்துறை செயலா் ராஜீவ் குமார் புதிய தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
பதவி ஏற்பு
புதிய தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் இன்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி . இவர் மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்து, கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். அதன் பின், பொது நிறுவனங்களின் தேர்வுகள் வாரியத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அப்பணியில் இருந்த போதே, இந்திய தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.