June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

போலி இளங்கலை பட்ட சான்றிதழ் வழக்கில், தங்க கடத்தல் ராணி சொப்னா கைது

1 min read

சொப்னா சுரேஷ்

4.9.2020

Gold smuggling queen Sopna arrested in fake bachelor’s degree case

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாக தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய நபரான சொப்னா மோசடிகளை செய்து வந்ததால் வெளியேற்றப்பட்டார். தூதரகத்தில் இருந்து வெளியேறிய பிறகு கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளி பூங்கா திட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த பணியில் சேர மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ெசாப்னாவுக்கு உதவியுள்ளார். இந்த பணியில் சேர சொப்னா அளித்திருந்த கல்லூரி இளங்கலை (பிகாம்) சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் சொப்னா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் சொப்னா கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே தங்கம் கடத்தல் வழக்கில் என்ஐஏ மற்றும் சுங்க இலாகா சொப்னாவை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குகளில் இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் போலி சான்றிதழ் வழக்கிலும் ேபாலீசார் நேற்று முறைப்படி ெசாப்னாவை கைது செய்துள்ளனர்.

மேலும் நீதிமன்ற அனுமதியுடன் சொப்னாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் கேரள போலீசார் தீர்மானித்துள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *