புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய தமிழகத்தில் குழு
1 min read
Tamil Nadu to explore new education policy
8-9-2020
புதிய கல்வி கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
புதியக் கல்விக் குழு
மத்திய அரசு கடந்த சமீபத்தில் புதிய கல்வி கொள்கையை அறிவித்தது. இதற்கு தி.மு.க. உள்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேநேரம் இந்த புதிய கல்விக் கொள்கயை பலர் வரவேற்றும் இருக்கிறார்கள்.
புதிய கல்வி கொள்கையில் உயர்கல்வி குறித்து ஆய்வு செய்ய ஏற்கனவே தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இது குறித்து ஆராய13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகல்வி குறித்து ஆராயும் குழுவிற்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமை வகிப்பார் என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 பேர் அடங்கிய குழுவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பூஜா குல்கர்னி லதா, கவிதா ராமு, முனியநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மற்றும் கல்வி துறையை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக்குழு மத்திய அரசின்கொள்கையை அமல்படுத்துவதற்கான ஏற்ற சூழ்நிலை குறித்து ஆராய்ந்து ஒரு ஆண்டிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக இடைக்கால அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதிய கல்விகொள்கையுடன் இரு மொழி கொள்கை பொருந்துகிறதா என்பதையும் குழு இந்தக் குழு ஆராயும் என்றும் கூறப்பட்டு உள்ளது.