June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

1 min read

A youth was arrested for trying to break into an ATM near Courtallam

8-9-2020

குற்றாலம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திடுட முயற்சி நடந்தது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஏ.டி.எம். எந்திரம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே இலஞ்சி-தென்காசி சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணியளவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் மர்ம மனிதன் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தான்.
ஆனால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டார்.

காலையில் பொழுது விடிந்ததும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்தது தெரியவந்தது. இதுபற்றி குற்றாம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கைது

போலீசார் விரைந்து சென்று ஏடிஎம் அறையிலிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டில் ஈடுபட்டது இலஞ்சி வேளாளர் தெருவைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து (வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *