June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் 9 முறை பிளாஸ்மா தானம்

1 min read

The returnee from the corona donated 9 plasma

8-9-2020

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த டெல்லி வாலிபர் 9 முறை பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

பிளாஸ்மா

கொரோனா தொற்று தாக்கியவர்கள் அதில் இருந்து குணமான பின் அவரது ரத்தத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். அவரது ரத்ததில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்மா மற்ற கொரோனா நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும்.
அதனால்தான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்று பிரசாரம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த டெல்லி வாலிபர் 9 முறை பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

அவரரு பெயர் தப்ரெஸ் கான். இவர் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு ஏப் மாதம் 5-ந் தேதி கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

9 முறை

இந்த நிலையில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. அதை ஏற்று தப்ரெஸ் கானும் தானம் செய்துள்ளார். இதுவரை அவர் ஒன்பது முறை பிளாஸ்மாவை தானம் செய்துள்ளார்.

பேட்டி

இது குறித்து தப்ரெஸ் கான் கூறியதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியான பிறகு குடும்பத்தினரை நினைத்து கவலைப்பட்டேன். நான் உயிருடன் இருப்பேனா இல்லையா என அச்சமடைந்தேன். அப்போது டாக்டர்கள் எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக நடந்து கொண்டார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக யோகா செய்ய தொடங்கினேன். கொரோனா உறுதியான பிறகு சமூகம் என்னை புறக்கணித்ததை உணர்ந்தேன். இந்த சம்பவத்தை எப்போதும் மறக்க முடியாது.

அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்மா தானம் செய்து வருகிறேன். என்னை போல் மற்றவர்களும் இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். இதுவரை ஒன்பது முறை பிளாஸ்மா தானம் செய்துள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு உயிரைக் காப்பாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது உடலில் ஆண்டிபாடிகள் இருக்கும் வரை இந்த சேவையை தொடர்ந்து செய்வேன். இதேபோல் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *