August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

1 min read

DMK Increase the number of Deputy General Secretaries to 5

9-9-2020

தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

சென்னையில் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்சியின் தலைமை அலுவலகத்தில் 70 பேர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் பொது செயலரின் அதிகாரத்தை மீண்டும் பொது செயலாளரிடமே ஒப்படைக்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

துணை பொதுச் செயலாளர்கள்

அதன் பின்னர் தி.மு.க.,வின் துணை பொது செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் துணை பொது செயலர்களின் எண்ணிக்கை 3 ல் இருந்து 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணை பொது செயலாளர்களாக உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *