June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 5,584 பேருக்கு கொரோனா- 6,516 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona to 6,516 people discharged to 5,584 people in a single day in Tamil Nadu

9-9-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளல் 5,584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 6,516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றிய விவரத்தை தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( புதன்கிழமை) மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் 5,584 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரனி மொத்த எண்ணிக்கை 4,74,940 ல் இருந்து 4,80,524 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டோரில் நேற்று மட்டும் 6,516 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,23,231 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் தற்போது 49,203 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 80,401பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 55,44,850 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 090 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில்…
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,910 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் – 44

செங்கல்பட்டு – 237

சென்னை -993

கோவை – 445

கடலூர் – 344

தர்மபுரி – 114

திண்டுக்கல் – 96

ஈரோடு -90

கள்ளக்குறிச்சி – 114

காஞ்சிபுரம் – 171

கன்னியாகுமரி – 136

கரூர் – 38

கிருஷ்ணகிரி – 75

மதுரை – 63

நாகை – 172

நாமக்கல் – 93

நீலகிரி – 69

பெரம்பலூர் -15

புதுக்கோட்டை – 118

ராமநாதபுரம் – 40

ராணிப்பேட்டை – 108

சேலம் – 279

சிவகங்கை – 37

தென்காசி – 60

தஞ்சை – 131

தேனி – 86

திருப்பத்தூர் – 82

திருவள்ளூர் -281

திருவண்ணாமலை – 142

திருவாரூர் – 127

தூத்துக்குடி – 58

திருநெல்வேலி – 139

திருப்பூர் – 120

திருச்சி – 98

வேலூர் – 140

விழுப்புரம் – 139

விருதுநகர் – 90

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *