சுக்கிர ஜெயந்தி
1 min read
Venus Jayanti
நவக்கிரங்களில் ஒருவராக சுக்கிரன் ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுணர்மியை அடுத்து வரும் தசமி திதியும் பூசம் நட்சத்திரமும் -கூடிய நாளில் அவதரித்தார். இந்த ஆண்டு தசமி திதி செப்டம்பர் 12-ந் தேதி (சனிக்கிழமை) வருகிறது. ஆனால் பூசம் நட்சத்திரம் அடுத்த நாளே வருகிறது. திதியை பிரதானமாக வைத்து கொண்டாடுபவர்கள் செப்டம்பர் 12-ந் தேதி அன்று நவக்கிரங்களில் சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். சுக்கிரனுக்கு மொச்சை தானியம் படைத்து, 6 நெய் தீபம் ஏற்றி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் குடும்ப சுகம் பெருகும். தாம்பத்தியம் தழைக்கும். சுக்கிர தோஷம் இருந்தால் விலகும்.