கமலுடன் சிம்பு இணையும் சிவப்பு ரோஜாக்கள்
1 min read
Simbu joins with Kamal in Sivappu rojakkal-2 move?
12-8-2020
கமலஹாசனுடன் சிம்பு இணைந்து நடிக்கும் சிவப்பு ரோஜாக்கள் -2 படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
சிவப்பு ரோஜாக்கள்
பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த சிவப்பு ரோஜாக்கள் படம் கடந்த 1978ம் ஆண்டு வெளியானது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக வெளியாகி மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
பெண்களை வெறுக்கும் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார்.
அந்தப் படத்தை மீண்டும் இயக்கும் முயற்சியில் இருக்கிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திட்டமிட்டு உள்ளார். அந்தப்படத்தில் கமலும் சிம்புவும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே தன் தந்தையுடன் இணைந்து சிகப்பு ரோஜாக்கள்- 2 என்ற பெயரில் அந்தப் படத்தை இயக்கப்போவதாக மனோஜ் அறிவித்திருந்தார். அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.
பேச்சு வார்த்தை
இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் மனோஜ் ஈடுபட்டுள்ளார்.
இதேபோன்ற கதையம்சம் உள்ள மன்மதன் படத்தில் நடித்த அனுபவம் சிம்புவுக்கு இருக்கிறது. சிகப்பு ரோஜாக்கள்- 2 படத்தில் அவருக்கும் கமலுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரங்களை மனோஜ் உருவாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் கமலும் சிம்புவும் முதன்முதலில் இணையும் படமாக சிகப்பு ரோஜாக்கள் 2 இருக்கும்.