June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இமாச்சல பிரதேசரத்தில் உலகின் நீளமாக சுரங்கப்பாதை

1 min read

he longest tunnel in the world in Himachal Pradesh

16-9-2020

இமாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை உருவாக்கப்பட்டு உள்ளது.

நீளமாக சுரங்கப்பாதை

இமாச்சல பிரதேசத்தில், முதல்-மந்திரி, ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு நடக்கிறது.

அந்த மாநிலத்தின் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் பதை சுற்றிச் செல்லும். அதை விரைவாகச் செல்ல மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
இதனை அடுத்து நெடுஞ்சாலையில் 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது 9.02 கி.மீ. நீளம் கொண்டது. உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கப் பாதை இது ஆகும். இந்த சுரங்கப்பாதைக்கு அடல் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

45 நிமிடம் பயண நேரம் குறையும்

இந்த சுரங்கப்பாதையில் 60 மீட்டர் இடைவெளியில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு, 500 மீட்டர் துாரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது. சுரங்கப்பாதையின் அகலம், 10.5 மீட்டர். மேலும்இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளது.
இது குறித்து தலைமை பொறியாளர் கே.பி.புருஷோத்தமன் கூறியதாவது:-

இந்த சுரங்கப்பாதை ஆறு ஆண்டுகளுக்குள் உருவாக்க திட்டமிட்டு 10 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் துாரத்தில் 46 கி.மீ., குறைவதுடன். மேலும் இந்த வழியாகச் சென்றால் 4 மணி பயண நேரம் குறையும்.
சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெற்றிகரமாக அமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *