May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

இலவச நாட்டு கோழிகள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

1 min read

Women can apply to get free country chickens

17-9-2020

தென்காசி மாவட்டத்தில் 4 ஆயிரம் பெண்களுக்கு இலவச நாட்டுக் கோழிகள் வழங்கப்படுகிறது. இதற்காக எழைப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட கலெக்ட்டர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலவச நாட்டுக் கோழி

கோழி அபிவிருத்தி திட்டம் 2020-21 ஆம் ஆண்டின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் வழங்கப்பட உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 மகளிர் வீதம் 10 ஊராட்சி ஒன்றியத்திற்கு 4000 மகளிருக்கு வழங்கப்படவுள்ளது.

தேர்வு செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் தகுதிகள்:

சுய உதவிக் குழு

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர் கட்டாயமாக ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு/ செம்மறியாடு கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு அசில் நாட்டுக்கோழிகள் 25 எண்ணம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒருநாள் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று 30.9.2020 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயளான் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.