May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

விஷ ஊசி / சிறு கதை/ முல்லை குமார்

1 min read

Visha oosi / Short story by Mullai Kumar

21-/9/-2020

இரவு ஒன்பது மணி , தேசிய நெடுஞ்சாலை, புளிய மரங்கள் நிறைந்த காட்டு பகுதி, இருட்டு போர்வையைபோர்த்தி இருந்த கிராமம். ஒருமணி நேரத்துக்கு ஒரு வாகனம் ஒளி வெள்ளத்தை வீசிய படி வேகமாக சென்றன.
ஓங்கி வளர்ந்த பெரியபுளிய மரத்தின் அடியில் நான்கு வாலிபர்கள், முகத்தில் லேசாக வளர்ந்த தாடி, கண்களில் ஒருவெறி,பேண்ட், சட்டை அணிந்திருந்தார்கள். இடுப்பில் மறைந்திருந்தது சிறிய பேனா கத்தி, பேண்ட் பாக்கெட்டில் சிறிய நைலான் கயிறு, வழக்கமாக வரும் அந்த காரை எதிர் நோக்கின அவர்களது கண்கள்.
பல நாள் திட்டம் இன்று நிறைவேறப்போகிறது. மனதிலிருந்தது கொடூர உற்சாகம். சரியாக ஒன்பது பத்து நிதானமான வேகத்தில் அந்தவெள்ளை நிற கார் வந்தது. காரை ஓட்டி வந்த து ஒரு இளம் பெண், இளம் சிவப்பு நிறத்தில்சேலை அணிந்திருந்தார். கழுத்தில் தங்க நகை மின்னியது. காதில் சின்னகம்மல். கையில் விலை உயர்ந்த கைக்கடிகாரம். அளவான உயரம், அம்சமான மேனி, அன்றலர்ந்த ரோஜாபூபோன்றமுகம், அதில் கனிவான புன்னகை, கார் அந்த புளிய மரத்தை நெருங்கிகொண்டிருந்தது. ரோட்டில் கல்லை போட்டு அந்த காரை நிறத்த நான்கு வாலிபர்களும் தயாராகி கொண்டிருந்தார்கள். புளியமரத்தின் அடியில் இருந்து வெளியேவந்தார்கள். கார் புளிய மரத்தை நெருங்கியது. காரின் குறுக்கே கல்லைபோடமுயன்றபோது வேகமாக வந்த லாரியின் ஹாரன் சத்தம் அதிர்ந்தது. உடனே காரில் வந்த இளம்பெண் காரை வேகமாக திருப்பினார். இதை எதிர்பார்க்காத வாலிபர்கள் கல்லை தூக்கி ரோட்டின்குறுக்கே போட்டபோதுவேகமாகவந்த லாரி நிலைதடுமாறி அந்த வாலிபர்கள் மீது மோதியது. ரோட்டில் ரத்தம் சிதறியது. படுகாயம் அடைந்த நான்கு வாலிபர்களும் அம்மா, அப்பா என்றுமுணங்கிக்கொண்டிருந்தார்கள். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். இந்த நேரத்தில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நான்கு வாலிபர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தார் அந்த இளம் பெண்.
அவர்கள் துடிப்பதை பார்த்து மனம் பதைத்தார். அவர்களை காப்பாற்ற நினைத்தது உள்ளம். அங்கு வழியாக வந்த வாகனத்தை நிறுத்த முயன்றார். நிற்கவில்லை. நமக்கு எதுக்கு வம்பு என்று நினைத்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் பறந்தனர். அந்த இளம் பெண் உடனடியாக நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு போன்செய்தார். விபத்தில் நான்கு பேர் சிக்கிஉயிருக்குபோராடிக் கொண்டிருப்பதை தெரிவித்தார் பதட்டத்துடன். அடுத்த பத்து நிமிடத்தில் நூற்றுஎட்டு ஆம்புலன்ஸ் வேன் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து நான்கு ஊழியர்கள் இறங்கினர். ரோட்டில்காயங்களுடன்கிடந்தவர்களைபார்த்தனர். அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோங்க என்றுஆணையிட்டார் அந்த இளம் பெண். ரத்த வெள்ளத்தில்கிடந்த நான்கு பேரையும் ஊழியர்கள் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றினர். அந்த இளம்பெண்அவரகளுக்கு உதவினார்.
காயம் அடைந்த இளஞர்கள்அந்த இளம் பெண்ணைஒருவித ஏக்கத்துடன் பார்த்தனர். யார் என்றுதெரியவில்லை. இவரது காரைத்தான் வழிமறிக்க நினைத்தோம் என்று வேதனையுடன் விழித்தனர். ஆம்புலன்ஸ் பறந்தது. அந்த இளம் பெண்ணும் ஆம்புலன்ஸ் வேனைபின்தொடர்ந்தார். நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பரப ரப்பாக இருந்தது. ஆம்புலன்சில்கொண்டுவரப்பட்டவாலிபர்களை அவசரசிகிச்சை பிரிவுக்கு கொண்டுசென்றார்க
ள். காயம் அடைந்த நான்கு வாலிபர்களின் உயிரைகாப்பாற்ற தீவிரநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காயங்களுக்குமருந்து போட்டுகட்டுகள் கட்டப்பட்டன. தலையில் காயம் அடைந்தவர்களுக்கு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
வலி தாங்காமல் அந்த இளைஞர்கள் அம்மா என்று கத்தினார்கள். அப்போது அந்த இளம்பெண் அவசரசிகிச்சை பிரிவுக்குள்நுழைந்தார்.மே லே வெள்ளைகோட்டு போட்டிருந்தார். கையில்ஸ்செதஸ்கோப் இருந்தது.
அவர் அந்த ஆஸ்பத்திரி டாக்டர், பெயர் கீதா. அவர் இரவு பணிக்கு காரி ல் வந்தபோதுதான் அந்த விபத்து நடந்தது. காயம் அடைந்த வாலிபர்களுக்கு அவர் டாக்டர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதையோ நினைத்து இப்படி விபத்தில்சிக்கிக்கொண்டோமே என்று மனதில்புலம்பிக்கொண்டிருந்தனர். டாக்டர் கீதா அந்த வாலிபர்களின் உடல்நிலை குறித்து ஆய்வுசெய்யதொடங்கினார். தலையில் காயம் அடைந்த ஒருவாலிபரின் கையைபிடித்து நாடி துடிப்பை பார்த்தார். அந்த கரம் பட்டதும் அந்தவாலிபர் மெல்ல கண்விழித்தார். நெடுஞ்சாலையில் இளம்பெண்ணாகபார்த்த ஒருவர் டாக்டராக நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அவன் கண்களில் இருந்துகண்ணீர்கொட்டியது. டாக்டர் என்று கத்தினான். டாக்டர் கீதா அன்புடன்,என்ன பிரதர் உடம்பு வலிக்குதா என்றுகேட்டார். அதற்கு அ வன், டாக்டர், எனக்குஉடம்புவலிக்கல, மனசு வலிக்குது டாக்டர் என்றான் கதறியபடி.ஏன்,என்னாச்சு என்றுகருணையுடன்கேட்டார் டாக்டர். உடனே அவன், நாங்க நல்லவங்க இல்லை டாக்டர், கெட்டவங்க டாக்டர், எங்களை விஷஊசிபோட்டுகொன்னுடுங்க, என்று கதறினான் கண்ணீர்விட்டு. டாக்டர்அவனைஅமைதிப்படுத்தினார். உயிரை காப்பாற்றவேண்டியது எங்கள் கடமை, அதைத்தான் நாங்கள்செய்வோம் என்றார். நாங்கள் என்ன தவறு செய்ய இ ருந்தோம் என்பதை நீங்கள் அறிந்தால் எங்களை அடித்தே கொன்று விடுவீர்கள் என்றான். டாக்டர்அதிர்ச்சியுடன், என்ன தவறுசெய்தாலும் சட்டம்தான்உங்களுக்குதண்டனைவழங்கும் என்றார். கண்ணீர்சிந்தியவாலிபருக்குஆறுதல் கூறினார். அவனுக்குஊசிபோடமுயன்றார். அ வன் கதறியபடி எங்களை சாகவிடுங்கள் டாக்டர், நாங்கள்பாவிகள் என்றான். டாக்டர்அவன்கைகளைபிடித்தபடி, பிரதர், அமைதியாக இருங்கள் என்றார். அவன் கேட்கவில்லை. டாக்டர், எனக்கு அக்கா-தங்கைஇல்லை. எனக்கு பாசம்காட்டஆள் இல்லை. என் நண்பர்களும் அப்படித்தான். தான்தோன்றித்தனமாகவளர்ந்தோம். தவறுகள்செய்தோம், நல்வழிசொல்லஅஆள்இல்லைஎன்றான்கண்ணீர்சிந்தியபடி, உடனேஅவனிடம் இப்போது மனம் திருந்தி விட்டீ ர்களா என்று கேட்டார் டாக்டர். அதற்கு அவன், டாக்டர்., பெண்களைபோகப்பொருளாகத்தான்நாங்கள் பார்த்தோம். அந்தபெண்ணுக்குள்ஒருதாய்இருப்பதையோ, ஒருசகோதரிஇருப்பதையோ, ஒருதெய்வம் இருப்பதையோ நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள்பாவிகள், உங்களை கடத்தி சென்று நகைகளை கொள்ளை
அடிக்கதிட்டமிட்டோம். பின்னர் உங்களைபாலியல்பலாத்கா ரம்செய்துகொல்லநினைத்தோம், ஆனால் விபத்தில்சிக்கிவிட்டோம். எங்களைசாகவிடுங்கள்என்றான்கதறியபடி.அதைகேட்டதும்டாக்டருக்குகொஞ்சம்அதிர்ச்சியாகத்தான்இருந்த து. ஆனால்அவர்அதைவெளியேகாட்டிக்கொள்ளாமல்அவனுக்குஊசிபோட்டார். அவன்அம்மாஎன்றுஅலறினான். அவன்கண்முன்டாக்டர்பெண்தெய்வமாககாட்சி தந்தார். சிகிச்சைபெறும்நான்குவாலிபர்களை அதாவதுகொள்ளையர்களைகைது செய்ய ஆஸ்பத்திரிக்கு விரைந்துவந்துகொண்டிருந்ததுபோலீஸ்படை

  • கவிஞர்முல்லைக்குமார் என்ற தபசுகுமார், முள்ளன்விளை, தூத்துக்குடி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.