ஆன்லைனில் விஷம் வாங்கி குடித்து இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை
1 min read23.9.2020
Engineering student commits suicide by buying poison onlineபாளை. ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (53). இவர் பணகுடியிலுள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நிஷாந்த் (19) பிளஸ் 2 முடித்து விட்டு மும்பையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக மும்பையிலிருந்து பெற்றோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் வந்தார். பின்னர் அவர் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார். ஆன்லைன் வகுப்பு தவிர பிற நேரங்களில் ஸ்மார்ட் செல்போனில் கேம் விளையாடியும், மும்பையில் உள்ள தனது நண்பர்களுடன் மணிக்கணக்கில் பேசியும் வந்துள்ளார்.
இதனையறிந்த அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனையடைந்த நிஷாந்த், ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் வாங்கி கடந்த 19ம் தேதி குடித்து விட்டு வீட்டில் மயங்கினார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பாளையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நிஷாந்த் நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி நிஷாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நிஷாந்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.