இந்தியாவில் கொரோனா பாதிப்பைவிட குணம் அடைந்தவர்கள் அதிகரிப்பு
1 min readIncrease in the number of cured corona victims in India
23-/9/2020
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பைவிட கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கொரோனா
இந்தயாவில் கொரோனா பரவலை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. இறப்பும் தொடர்கிறது. ஆனாலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒருசிலரை தவிர எல்லோரும் குணம் அடைகிறார்கள். நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட குணம் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
கொரோனா நிலவரம் பற்றி இன்று(புதன் கிழமை) காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
83,347 பேருக்கு கொரோனா
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே ஒரே நாளில் 83,347 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 லட்சத்து 46 ஆயிரத்து 11 ஆனது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,085 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 9 லட்சத்து 68 ஆயிரத்து 377 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குணமானவர்கள்
இந்தியாவல் நேற்று ஒரே நாளில் 89,746 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 87 ஆயிரத்து 614 ஆனது.
தினமும் 12 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 6.5 கோடி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பரிசோதனை செய்யப்படுவதால், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடிக்க முடிகிறது. தொற்று எண்ணிக்கை விகிதம் குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மாநிலங்களிலும் அதிகளவு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. ‘
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.