May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கனடாவில் இருந்து வெளிநாடு செல்ல ஒரு மாதம் தடை

1 min read

One month ban from going abroad from Canada

1/10/2020

கனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த மாதம் 31-ந் தேதி வரை வெளிநாடுகளுக்கு பயணம் செய் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. உலக அளவில் இதுரை 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கனடாவில் மட்டும் இதுவரை 1,58,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் 1,34,971 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 9,297 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கனடா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறைத் தண்டனையும் விதித்து வருகிறது.

தடை நீடிப்பு

இந்த நிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “கனடாவில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக இந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை வெளிநாட்டினருக்குப் பயணத் தடை நீட்டிக்கப்படுகிறது.
இதில் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகப் பணியாளர்களுக்கு இதில் விலக்கு கொடுக்கப்படுகிறது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.