May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்காவில் வாழும் 42 லடசம் இந்தியர்களில் 2.73 லட்சம் பேர் ஏழைகள்

1 min read

42 lakh Indians living in the United States, 2.73 lakh are poor

2/10/2020
அமெரிக்காவில் வாழும் 42 லட்சம் இந்தியர்களில் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் ஏழைகள் என்று அறியப்பட்டு உள்ளது.

ஏழைகள்

இந்தியாவில் மட்டும்தான் ஏழைகள் உள்ளதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிக்கிறோம். ஆனால் எல்லா நாடுகளிலும் ஏழைகள் உண்டு. அமெரிக்காவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள் எல்லாம் வசதி வாய்ப்போடு இல்லை. இங்கிருந்து சென்றவர்களிலும் ஏழைகள் உள்ளனர்.

42 லட்சம் பேர்

அமெரிக்காவில் மொத்தம் 42 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் 6.5 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது அங்கு வாழும் இந்தியவர்கள் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் ஏழைகளாக வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ்

ஹாப்கின்ஸின் பால் நிட்ஜ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் சார்பில், ‛அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வறுமை பற்றிய ஆய்வு’ மேற்கொள்ளப்பட்டது. தேவேஷ் கபூர் மற்றும் ஜஷான் பஜ்வாட் ஆகியோரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகள் இந்தியாஸ்போரா தரப்பில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது வெளியிடப்பட்டன.

அமெரிக்க வாழ் இந்தியர்களில் பெங்காலி, பஞ்சாபி பேசும் மக்கள் அதிகம் வறுமைக்குள்ளாவது தெரியவந்துள்ளது. ஆனாலும், அமெரிக்காவில் வாழும் வெள்ளை- கருப்பு, ஹிஸ்பானிக் இனத்தவர்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்கவாழ் இந்தியர்கள்வறுமைக்குள்ளாவது குறைவு என்று ஆய்வு நடத்திய கபூர்கூறியுள்ளார்.

மேலும் அதிகரிக்க வாய்ப்பு

தற்போது கொரோனா காரணமாக பலர் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பார்கள். இதனர் இப்போது

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.