May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவிக்கு கொரோனா

1 min read

Corona to US President Trump and his wife

2/10/2020

அமெரிக்க அதிபர்

டொனால்டு டிரம்ப்புக்கும், அவரது

மனைவி மெலனியாவிற்கும்

கொரோனா தொற்று உறுதி

செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப்

உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடின்றி தொற்றி வருகிறது. சாதாரண மனிதன் முதல் அதிபர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரவிய நாடுகளில் அமெரிக்காதான் முதலிடம் உள்ளது. இப்போது அமெரிக்க அதிபர் ரொனால்டு டிரம்ப் மற்றும்

அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தனிமை

அமெரிக்காவில் அடுத்த மாதவம் ( நவம்பர்) 3-ந் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து டிரம்ப் மற்றும்அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

குணம் அடைய வாழ்த்து

டிரம்ப் அவரது மனைவி மெலனியா விரைவில் குணமாக வேண்டி பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் டிரம்ப் குணமாக வாழ்த்தி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.