May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் மின்சார ரெயில் போக்குவரத்து 5-ந் தேதி தொடக்கம்

1 min read

Electric train in Chennai Traffic starts on the 5th

2/10/2020

சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரெயில்

தமிழகத்தில் ஊரங்கில் பல தளர்வுகள் கொடுக்கபட்டதால் பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் சென்னை நகரில் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் வருகிற 5-ந் தேதி மின்சார ரெயில் இயக்கப்படும் என்ற தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசு கோரிக்கையை எற்று ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் இந்த ரெயிலில் பயணிக்க, இரண்டு கட்ட சோதனைக்கு பிறகே அனுமதி வழங்கப்படும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டும் ரெயில்

பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என்றும், துறை சார்ந்த அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ரெயில் பயணத்திற்கு முன், உடல்வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும் என்றும் பயணிகள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஏழை மக்கள்

தற்போது இதனால் வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் எல்லாம் இருசக்கர வாகனம், பஸ், மெட்ரோ ரெயில்களில் சென்று வருகிறார்கள். இதுற்கு பணம அதிக அளவில் செலவாகிறது. காரணம் சென்னையில் சிறப்பு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டால் அன்றாட பணிக்கு செல்பவர்கள் ரெயிலில் சென்று வருவார்கள்.
இதில் அரசு ஊழியர்கள், பெரிய தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் அலுவலங்கள் மூலம் எளிதில் டிக்கெட் வாங்கி விடுவார்கள். ஆனால் மெக்கானிக், கடை பணியாளர்க்ள போன்று சிறுசிறு தொழில் செய்பவர்களால் டிக்கெட் வாங்குவது என்பது அரிதாகிவிடும். கட்டணம் அதிகம் என்பதால் இதுவரை வேலைக்குகூட செல்ல முடியாமல் இருப்பார்கள். அன்றாடம் சென்று வரும் அவர்களுக்கும் டிக்கெட் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.