May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தீராத வலிப்பு நோய்க்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு; அப்போலோ மருத்துவர்கள் சாதனை

1 min read

urgical cure for chronic epilepsy; Apollo Doctors Achievement

தென் மாவட்டங்களிலே முதல் முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் தீராத வலிப்பு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் குணப்படுத்தியுள்ளனர். 

சிவகங்கையையும்,  தென்காசியையும் சேர்ந்த இரண்டு குழந்தைகள் தீராத வலிப்பு (Epilepsy) நோயினால் அவதிப்பட்டு வந்தனர். சமீபத்தில் அவர்கள், மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  வலிப்பு நோய் மருத்துவர் டாக்டர் முத்துக்கனி, நரம்பியல் மருத்துவர்கள் மீனாட்சி சுந்தரம், கார்த்திக், சுரேஷ், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சுந்தரராஜன், ஷியாம் கெவின் ஜோசப், நரம்பு மயக்கவியல் மருத்துவர்  நிஷா,  தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் பத்மபிரகாஷ் ஆகியோர் குழுவாக இணைந்து இந்த இரு குழந்தைகளுக்கும் வலிப்பு நோய் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை

சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகள் இருவரும் குணம் அடைந்தனர். 24 நேர தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவர்கள் எந்த சிரமமின்றி இயல்பு நிலைக்கும்  திரும்பி விட்டனர். 

இந்த அறுவை சிகிச்சை அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை, வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுத்துள்ளது என்று, மருத்துவர் குழுவினர் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.