July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரேநாளில் 74,383 பேருக்கு கொரோனா; 89.154 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 74,383 people in one day in India; 89.154 people discharged

11/10/2020

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 74,383 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேநேரம் நேற்று மட்டும் 89.154 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா

இந்தியாவில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படாவிட்டாலும் அதிலிருந்து குணமாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா நிலவரம் பற்றி தினமும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மேலும் ஒரே நாளில் 74,383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை ரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையும் 70 லட்சத்து 53 ஆயிரத்து 807 ஆக உள்ளது.

தற்போது 8 லட்சத்து 67 ஆயிரத்து 498 பேர் கொரோனாவுக்க சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டிஸ்சார்ஜ்

இந்தியாவில் நேற்று மட்டும் 89,154 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்து 77 ஆயிரத்து 977ஆகும்.

இந்தியாவில் நேற்று மட்டும் 918 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 1லட்சத்து 8 ஆயிரத்து 334 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 544 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 8 கோடியே 68 லட்சத்து 77 ஆயிரத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக டதாக ஐ.சி.எம்.ஆர். அறவித்து இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *