July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆய்க்குடி, சாம்பவர் வடகரை பகுதியில் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஆய்வு

1 min read

Collector Ranjith Singh inspects Aaykudi and Sambavar Vadakarai areas.

31.7.2026
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, சாம்பவர் வடகரை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி ஆய்க்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானிய நிதி (2023-2024) திட்டத்தின் கீழ் ரூ.56.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஆய்வகக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மூலதன மானிய நிதி (2024-2025) திட்டத்தின் கீ 103.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, சாம்பவர் வடகரை பேரூராட்சியில், 14-ஆவது வார்டு இந்திரா காலனியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் (2025-2026) இன் கீழ் ரூ.100.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில், ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி, சாம்பவர் வடகரை பேரூராட்சி செயல்அலுவலர் (பொ) விமலா ஸ்டெல்லாபாய் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *