June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

பஞ்சாயத்து தலைவரை அவமதித்த அதிகாரி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

1 min read

he officer who insulted the panchayat leader was arrested under the Torture Act

10/10/2020

பஞ்சாயத்து பெண் தலைவரை அவமதித்த பெண் அதிகாரி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாயத்து தலைவர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக(கிராம பஞ்சாயத்து தலைவர்) இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை மாதம்17-ந் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கைது

இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரின்பேரில் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் சிந்துஜாவை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிந்துஜா தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *