தமிழகத்தில் இன்று 5,165 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min read
In Tamil Nadu, 5,165 people recovered from Corona today
12/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,165 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா
கொரோனா நிலவரம் பற்றி தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழ்நாட்டில் இன்று(திங்கட்கிழமை) மட்டும் 4,879 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,61,264 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 2,877 பேர் ஆண்கள். 2,001 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,99,382. பெண்களின் எண்ணிக்கை 2,61,850. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 .
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 191 ஆய்வகங்களில் 80,162 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 84 லட்சத்து 2 ஆயிரத்து 994 மாதிரிகள் பரிசோதனையிடப்பட்டன.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,165 பேர் கொரேனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 ஆக உள்ளது.
இன்று மட்டும் 62 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் 33 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 29 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 10,314 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தற்போது 43,747 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டும் 1,212 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை 1,83,251 பேர் கொரோனா பாதிக்கப்புக்கு உள்ளானார்கள்.
கோவையில் இன்று 393 பேருக்கும், சேலத்தில் 304 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும், திருவள்ளூரில் 229 பேருக்கும், திருப்பூரில் 185 தஞ்சாவூர், ஈரோடில் தலா 146 பேருக்கும், நாமக்கலில் 145 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 139 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 62 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 17 பேருக்கும், தூத்துக்குடி 59 பேருக்கும்
இன்று சென்னையில் 13 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 7 பேரும், கோவையில் 6 பேரும், வேலுாரில் 4 பேரும், கடலுாரில் 3 பேரும் தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலியில் தலா 2 பேரும், திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், திருப்பத்துார், திருவண்ணாமலை, திருப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,219 பேர் கொரேனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம்1,66,067 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவையில் இன்று 466 பேரும், செங்கல்பட்டில் 315 பேரும், சேலத்தில் 332 பேரும், தஞ்சாவூரில் 317 பேரும், வேலூரில் 143 பேரும், திருவள்ளூரில் 201 பேரும், நாமக்கலில் 146 பேரும், நீலகிரி 148 பேரும், நாமக்கல்லில் 146 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.