August 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் இன்று 5,930 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 5,930 people in Kerala today

12/10/2020

கேரளாவில் இன்று ஒரே நாளில் 5,930 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கேரளாவில் கொரோனா

இந்தியாவில் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் மிக குறைவாக இருந்தது. ஆரம்பத்தில் கொரோனா பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலும் குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

கேரளாவில் கொரோனா பரவல் பற்றிய விவரத்தை அந்த மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கேரளாவில் இன்று( திங்கட்கிழமை) ஒரே நாளில் 5,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 94 ஆயிரத்து 388 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7,836 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரத்து 634 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *