June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

100 ரூபாய் நாணயம்; மோடி வெளியிட்டார்

1 min read

Prime Minister Modi released 100 rupee coin

12/10/2020

டெல்லியில் மறைந்த பாரதீய ஜனதா தலைவர் விஜயராஜே நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

100 ரூபாய் நாணயம்

பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. இவர் 1919-ம் ஆண்டு அக்டோபடர் மாதம்12-ந் தேதி பிறந்தார். அவர் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி மறைந்தார்.
விஜயராஜே பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், விஜயராஜே குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *