July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

1 min read

Opposition to Vijay Sethupathi playing cricketer Muttiah Muralitharan

14/10/2020

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு வலைதனத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

முத்தையா முரளிதரன்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாறை சினிமா படமாக எடுக்கிறார்கள். அந்தப் படத்தை ஸ்ரீபதி என்பவர் டைரக்ட்டு செய்கிறார்.
இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர்.
இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

கண்டனம்

அதே நேரத்தில் இந்தப் படத்தில் நடிக்கம் விஜய்சேதுபதிக்கு கண்டனங்களும் வரத்தொடங்கி உள்ளன. இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்தது. எனவே விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்றே எதிர்பார்த்தார்கள். சிலதினங்களுக்கு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறவிப்பு வந்தபோது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஜய் சேதுபதிக்கு சினிமாவில் நல்ல அடையாளம் தந்த இயக்குனர் சீனுராமசாமி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு டுவீட் போட்டார்.

இலங்கையில் போராட்டம்

இந்தநிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி, மோஷன் போஸ்டரும் வெளியானதால் இப்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது.
இலங்கை இனப் போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் முரளிதரன் என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும், விஜய் சேதுபதி தன்னை ஒரு தமிழ் உணர்வாளராகக் காட்டிக் கொள்பவர். அப்படியிருக்கும் போது அவர் எப்படி இதில் நடிக்க சம்மதித்தார், உங்களுக்கு வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி என இன்று டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இந்த ஹேஷ்டாக்கை ரீ-டுவீட் செய்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.