கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமனா வீடு திரும்பினார்
1 min read
Tamana, who was suffering from corona, returned home
15/10/2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை தமனா குணம் அடைந்து வீடு திரும்பினார். அவரை பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றார்கள்.
நடிகை தமன்னா
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த ஆகஸ்டு மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் நடிகை தமனா தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை எனக்கூறியிருந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதையடுத்து ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற தமன்னாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தமன்னா குணம் அடைந்தார். இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
வீட்டிற்கு வந்த தமன்னாவை அவரது குடும்பத்தினர் வாசலிலேயே வரவேற்று அழைத்துச் சென்றனர். தமனாவில் தந்தையும், தாயும் தமனாவை கட்டியணைத்து வரவேற்றார்கள்.
கொரோனாவில் இருந்து தான் மீண்டு வந்ததைப் பற்றியும் உருக்கமான வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.