தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா; 5,245 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 4,389 people in Tamil Nadu; 5,245 discharged
16–/10/2020
தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் இன்று 5,245 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை) மட்டும் 4,389 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து191 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 192 ஆய்வகங்களில் 91,245 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 87 லட்சத்து 66 ஆயிரத்து 38 மாதிரிகள் பரி சோதனை செய்யப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளவர்களில் 2,631 பேர் ஆண்கள். 1,758 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து10 ஆயிரத்து 208 . பெண்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 951. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 .
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,245 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து 6 லட்சத்து 27 ஆயிரத்து 703 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழத்தில் இன்று மட்டும் 57 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்வ. இதில் 37 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 20 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 10,529 ஆக இறந்துள்ளனர்.
தற்போது 40,959 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 1,140 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை 1,87,852 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கோவையில் 387 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும், சேலத்தில் 244 பேருக்கும், திருவள்ளூரில் 195 பேருக்கும், திருப்பூரில் 147 பேருக்கும், ஈரோடில் 138 பேருக்கும், நாமக்கலில் 132 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 130 பேருக்கும், வேலூரில் 118 பேருக்கும், கடலூரில் 116 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லை
திருநெல்வேலி மாவடத்தில் இன்று 61 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 56 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் 15 பேரும், ஈரோட்டில் 5 பேரும், செங்கல்பட்டு, வேலூரில் தலா 4 பேரும், தர்மபுரி, சேலம், திருச்சியில் தலா 3 பேரும், கடலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருப்பூர், விருதுநகரில் தலா 2 பேரும், கோவை, காஞ்சிபுரம், தென்காசி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 1,185 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் 913 பேரும், செங்கல்பட்டில் 322 பேரும், சேலத்தில் 314 பேரும், திருப்பூரில் 229 பேரும், திருவள்ளூரில் 195 பேரும், நாமக்கலில் 137 பேரும், கடலூரில் 126 பேரும், வேலூரில் 120 பேரும், நீலகிரியில் 102 பேரும், காஞ்சிபுரத்தில் 99 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.