சுப்பையாவாக நடித்த சுப்பையாவிடம் படிக்க வேண்டிய பாடம்
1 min readA lesson for actors to learn from SV Subbaiah
20/10/2020
பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையாவுக்கு இன்று (20/10/2020) நூறாவது வயது. இவர் 1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி பிறந்தார்.
கப்லோட்டிய தமிழன் படத்தில் பாரதியாராக நடித்து அந்த வேடத்திற்கு பெருமை சேர்த்தவர். பாரதியின் இயற்பெயர் சுப்பையா. அந்த சுப்பையாக வேடத்தில் இந்த எஸ்.வி.சுப்பையா நடித்திருந்தார்.
எஸ்.வி.சுப்பையாவின் சொந்த ஊர் அப்போதைய நெல்லை மாவட்டம்(தற்போது தென்காசி மாவட்டம்) செங்கோட்டை ஆகும். இவர் பாவூர்சத்திரம் அருகே பனையேறிப்பட்டி என்ற கிராமத்தில் வசித்தார்.
கலைத் துறையில் ஆர்வம் கொண்ட எஸ்.வி.சுப்பையா முதலில் டி.கே.எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.
1952-ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்க தொடங்கினார். எஸ்.பாலசந்தர்-பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.
தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் ஜெமினிகணேசன்- அஞ்சலி தேவி காதநாயகன், நாயகியாக நடித்திருந்தனர். இதில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்தார். இந்தப் படம்தான் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் இவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அதன்பின் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்தார்.
இவர் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சிவாஜிகணேசனுடன் எஸ்.வி.சுப்பையா அதிக படங்களில் நடித்தார்.
சிவாஜி கணசேன்
எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார். எஸ்.வி.சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்.’ எஸ்.வி.சுப்பையா, சவுகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில், கவுரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை-வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார். வெற்றிகரமாக ஓடிய படம் இது. இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.வி.சுப்பையாவுக்காக பணம் வாங்காமல் நடத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
எஸ்.வி.சுப்பையா 29-1-1980 அன்று மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 57. எஸ்.வி.சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள். ஒரு மகன்.
விவசாயம்
எஸ்.வி.சுப்யைா குடும்பத் தொழில் ஆசாரி தொழில். ஆனாலும் இவரது குடும்பத்தினர் விவசாயமும் செய்து வந்தனர்.
இவர் சினிமாவில் நடித்துவந்த காலத்தில் இடையில் தொய்வு விழுந்தது. அப்போது அவர் துவண்டுவிடவில்லை. சொந்த ஊருக்கு வந்து ஏர் உழுது விவசாயம் செய்தார். மீண்டும் படவாய்ப்பு கிடைத்தவுடன் சென்னை வந்தார். தன் வாழ்வின் இறுதி காலத்தில் சென்னை செங்குன்றத்தில் வசித்து வந்தார். சினிமாவில் தொய்வு ஏற்பட்டபோது அதைப்பற்றி கவலைபட்டாத சூழ்நிலையை மற்ற நடிகர்-நடிகைகள் ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.
கண்டிப்பானவர்
சினிமா படப்படிப்பின்போது மிகுந்த ஆர்வமுடன் நடிப்பார். உடன் நடிப்பவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் எஸ்.வி.சுப்பையாகவுக்கு கோபம் வந்துவிடும். எதிரே நடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அடித்துவிடுவார்.
“கண் கண்ட தெய்வம்” என்ற திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை பத்மினி நடித்தார். இது பத்மினிக்கு ஆரம்ப கால படம். அவருக்கு வசனம் கொஞ்சம் சரியாக வரவில்லை. அப்போது அவரை எஸ்.வி.சுப்பையா கன்னத்தில் அடித்துவிட்டார்.
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான குலவிளக்கு திரைபடத்தில் நடிகை சரோஜாதேவி வசன காட்சியில் சரியாக பேசவில்லை. சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. அப்போது சரோஜாதேவி கர்ப்பமாக இருந்தார். ஆனாலும் அவர் மீது கோபம் கொண்டு அவர முதுகில் அடித்துவிட்டார்.
ஜக்கம்மா என்ற படத்தில் நடிகை சாவித்திரியுடன் நடித்தார். சாவித்திரியும் சரியாக பேசாததால் அவரையும் அடித்துவிட்டார்.
நடித்த படங்கள்…
எஸ்.வி.சுப்பையா நடித்த படங்களில் சில…
விஜயலட்சுமி (1946)
கஞ்சன் (1947)
ஏகம்பவாணன் (1947)
ராஜகுமாரி (திரைப்படம்) (1947)
திருமழிசை ஆழ்வார் (1948)[1]
மாயாவதி (1949)
வேலைக்காரன் (1952)
ராணி (1952)
புதுயுகம் (1954)
சுகம் எங்கே (1954)
போர்ட்டர் கந்தன் (1955)
வள்ளியின் செல்வன் (1955)
மங்கையர் திலகம் (1955)
கோகிலவாணி (1956)
நானே ராஜா (1956)
ரம்பையின் காதல் (1956)
சௌபாக்கியவதி (1957)
மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
அவன் அமரன் (1958)
நான் வளர்த்த தங்கை (1958)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)[2]
நான் சொல்லும் ரகசியம் (1959)
பாகப்பிரிவினை (1959)
வாழவைத்த தெய்வம் (1959)
இரும்புத்திரை (1960)
பார்த்திபன் கனவு (1960)
களத்தூர் கண்ணம்மா (1960)
பாதை தெரியுது பார் (1960)
பெற்ற மனம் (1960)
யானைப்பாகன் (1960)
கப்பலோட்டிய தமிழன் (1961)
பாவ மன்னிப்பு (1961)
பாத காணிக்கை (1962)
கண் கண்ட தெய்வம் (1967)
காவல் தெய்வம் (1969)