“டெட்” தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்
1 min readThe “Dead” Pass Certificate goes on for life
23/10/2020
“டெட்” தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழர் இனி ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது.
டெட் தேர்வு
தேசிய ஆசிரியர் கல்விக் குழும பொதுக்குழு அதிகாரிகள் கூட்டம், டெல்லியில் கடந்த மாதம் (செப்டம்பர்) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் திருத்தம் செய்து, ஒருமுறை தேர்ச்சி பெற்றால், அதற்கான சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்க வகையில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் டெட் தேர்வை எழுதுவோருக்கு மட்டுமே ஆயுள் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆலோசனை
அதேநேரம் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் வரை சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக்குப்பின்னர் அதுபற்றிய முடிவு அறிவக்கப்படும் என்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வரும்நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.